காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுகள், 940 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி, புள்ளலுார், பரந்துார் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மேற்கண்ட நான்கு பள்ளிகளைச் சேர்ந்த, 294 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.அதை தொடர்ந்து, புரிசை கிராமத்தில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று, 61 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.இதேபோன்று, வாலாஜாபாத் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 333 மாணவியருக்கும், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 138 மாணவர்களுக்கும், வாலாஜாபாத், மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 114 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார்.வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.