உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதை கண்டித்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவ கழகதலைவர் டாக்டர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார்.செயலர் தன்யகுமார், இணை செயலர் வெ.முத்துக்குராமன், மத்தியக் குழு உறுப்பினர் அன்புச்செல்வன், மாநிலக்குழு உறுப்பினர் பி.டி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் பாலாஜிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவரை தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்.மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவும், மருத்துவர்களுக்கென பாதுகாப்புக்காக சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெண் மருத்துவர்கள் பிரிவின் செயலர் ஜி.காஞ்சனா, மூத்த மருத்துவர் ஜீவானந்தம் உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.முன்னதாக காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் உள்ள லைப்கேர் மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை