உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழப்பு

சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் உயிரிழப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமித்பாஷா, 48. இவர், மாம்பாக்கம் தனியார் நிறுவனம் ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 10ம் தேதி, அயிமிச்சேரியில் உள்ள மளிகை கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அயிமிச்சேரி பெட்ரோல் பங்க் அருகே சாலை வளைவில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அமித்பாஷா உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் அப்துல்மஜித் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை