மேலும் செய்திகள்
ஹார்டுவேர்ஸ் கடையில் குட்கா பதுக்கியவர் கைது
07-Nov-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் பகுதியில், வடமாநில இளைஞர்களை குறிவைத்து, போதை மாத்திரை விற்பைனை செய்வதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று ஒரகடம் மேம்பாலத்தின்கீழ், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, மேம்பாலத்தின்கீழ், சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பேசியதை அடுத்து, அவரிடம் நடத்திய சோதனையில், 200 போதை மாத்திரை வைத்திருந்தது தெரிந்தது.விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்த ஆகாஷ், 21, என்பதும். மும்பையில் இருந்து ‛டைடால்' எனப்படும் வலி நிவாரண மாத்திரையை ஆன்லைனில் வாங்கி, ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வடமாநில இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
07-Nov-2024