உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கண்காணிப்பு இல்லாததால் மரங்களை வெட்டி சாய்க்கும் அவலம்

கண்காணிப்பு இல்லாததால் மரங்களை வெட்டி சாய்க்கும் அவலம்

எடையார்பாக்கம், :மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. ஏரி நீர்ப்பிடிப்பு அல்லாத பகுதியில், வெள்ளை மற்றும் கருப்பு நிற கருவேல மரங்கள் வளர்ந்துஉள்ளன.மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவேல மரங்களை வெட்டும்போது, எடையார்பாக்கம் ஊராட்சிக்கு, கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.இந்த ஏரியையொட்டி வளர்ந்துள்ள கருவேல மரங்களை முறையான கண்காணிப்பு இல்லாததால், மரங்கள் வெட்டி சாய்க்கப்படும் சூழ்நிலை மற்றும் திருடிச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது.இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, மரங்களை வெட்டி கடத்துவோரை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. எனவே, கருவேல மரங்களை வெட்டி சாய்ப்போர் மற்றும் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை