மேலும் செய்திகள்
மாணவனை கடத்தி சென்று தாக்கிய வாலிபர்கள் கைது
02-Aug-2025
பள்ளிப்பட்டு:ஆந்திராவில் இருந்து பள்ளிப்பட்டு நோக்கி வந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், மூதாட்டி பலியானார். ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேர், 'கியா சோனட்' காரில், பள்ளிப்பட்டு வந்து கொண்டிருந்தனர். திருமலைராஜபேட்டை அருகே வந்த போது, அங்கு சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பத்மா, 60, என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விஸ்வநாதன், 50, ரேகா, 35, சிட்டம்மா, 52, ரேகாவின் ஒன்பது மாத ஆண் குழந்தை, கார் ஓட்டுநர் என, ஐந்து பேர், படுகாயம் அடைந்தனர். பள்ளிப்பட்டு போலீசார், காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
02-Aug-2025