உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  செங்கற்கள் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

 செங்கற்கள் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

காஞ்சிபுரம்: புத்தேரி கிராமத்தில், செங்கற்கள் மூதாட்டி மீது விழுந்ததில், அவர் காயமடைந்து உயிரிழந்தார். காஞ்சிபுரம் அருகே, புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டாள், 80; இவர், தன் வீட்டருகே, நேற்று முன்தினம், செங்கற்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, செங்கற்கள் எதிர்பாராத விதமாக, மூதாட்டி மீது சரிந்து விழுந்துள்ளது. இதில், படுகாயமடைந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மூதாட்டி இறந்தார். இதுகுறித்து, மூதாட்டியின் மகன் ரவிசங்கர், காஞ்சி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்