உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு கொக்கி போட்டு மின் திருட்டு

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு கொக்கி போட்டு மின் திருட்டு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, தமிழக காங்., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வப்பெருந்தகை பங்கேற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு, மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டு மின் திருட்டில் ஈடுபட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுப்பெரும்பேடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் தலைமையில் நேற்று நடந்தது. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்று, முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முகாமிற்காக ஊராட்சி மன்ற அலுவகம் எதிரே பந்தல் அமைத்து ஒலி, ஒளி வசதியை ஊராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்தினர். இதற்காக, அருகே உள்ள மின் கம்பத்தில் இருந்து, கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டது. மின் வாரிய அதிகாரிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் பங்கேற்ற முகாமிற்கு, சட்ட விரோதமாக மின்சாரம் திருடப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ