மேலும் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
30-Sep-2025
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
30-Sep-2025
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
30-Sep-2025
விவசாயிகள் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம்
30-Sep-2025
சென்னை:''நவீன தொழில்நுட்பமும், டிஜிட்டல் துறைகளும் ஒட்டுமொத்த மக்களையும் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்,'' என தொழில்நுட்ப உச்சி மாநாட்டு நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார்.சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:கடந்த இரண்டு நாட்களில், 100 திறனாளர்கள், 1000 பங்கேற்பாளர்கள், 25 அமர்வுகள், 10,000 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாடு புதிய தொழில்முனைவோரை உருவாக்கும். உலக அளவிலான கண்டுபிடிப்புகளிலும் பங்கேற்கும் திறனை வளர்க்கும். இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.இந்தியாவில் இளைஞர்களின் மனிதவளம் அதிகம் உள்ளது. அடுத்த, 25 ஆண்டுகளில், 22 கோடி பேருக்கு கவர்ச்சிகரமான வருமானம் தரும் வேலை வாய்ப்பும் இந்திய இளைஞர்களுக்கு உள்ளது.நவீன தொழில்நுட்பமும், டிஜிட்டல் துறைகளும் ஒட்டுமொத்த மக்களையும் வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் தியாகராஜன், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், டிஜிட்டல் சேவைகள் துறை செயலர் தீரஜ்குமார், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025