உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கலைநிகழ்ச்சி வாயிலாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

கலைநிகழ்ச்சி வாயிலாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

காஞ்சிபுரம், மத்திய மற்றும் மாநில அரசின் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றம் துறை, காஞ்சிபுரம்மாவட்டம், தேசிய பசுமைப்படை சார்பில், காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் அதிகம்பேர் கூடும் இடங்களில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகன பிரசார கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது.தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வில்லியம்ஸ், முதல்வரின் பசுமை தோழர் யுவஸ்ரீ ஆகியோர் கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதில், டைமண்ட் தொண்டு நிறுவன 11 நாட்டுப்புற கலைஞர்கள் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.இதில் ஒயிலாட்டம், கரகம், பறையாட்டம், வீதி நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி வாயிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தவிர்த்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கலைஞர்கள் கலைநிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி