உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு

துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க எதிர்பார்ப்பு

விநாயகபுரம், : காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, விநாயகபுரம் வழியாக, லாலா வரவு கால்வாய் செல்கிறது. 2022- - 23ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 23.15 லட்சம் ரூபாய் செலவில், 350 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் கால்வாய் கட்டப்பட்டது.இக்கால்வாயை ஊரக வளர்ச்சி துறையினர், முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே கால்வாயில் செடி, கொடிகள் மண்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வெளியேறாமல் கால்வாயில் ஒரே இடத்தில் தேங்கி பாசி படர்ந்துள்ளது.இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது. மேலும், தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, லாலா வரவு கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை