மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் நாளை இலவச கண் மருத்துவ முகாம்
27-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாமில் 101 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் சரஸ்வதி டியூஷன் சென்டர் மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், பெரிய காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சுரகரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தொண்டை மண்டல ஆதீ னம் மடத்தில் நேற்று நடந்தது. இதில், பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த, கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில், 101 பேர் பங்கேற்றனர். இதில், நோயின் தன்மைக்கேற்ப மருந்து மாத்திரை வழங்கப்பட்டன. கண்புரை குறைபாடு உள்ள, 20 பேர் கண் மருத்துவ நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டு, விழிலென்ஸ் பொருத்தி, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக, பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டனர். லேசான கண்பார்வை குறைபாடு உள்ள, 30 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது என, முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.
27-Sep-2025