உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருப்புலிவனத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருப்புலிவனத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட மருதம், திருப்புலிவனம் ஆகிய கிராமங்களில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான பூர்வாங்க பணிகளை சிப்காட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சிப்காட் தொழிற்பூங்காவுக்கு, தங்களது நிலங்களை வழங்க முடியாது என, கடந்த சில மாதங்களாகவே, மருதம், திருப்புலிவனம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் பலரும் பங்கேற்ற மனு கொடுக்கும் போராட்டம், காஞ்சிபுரம் காவலான்கேட்டில் நேற்று காலை நடந்தது. விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையிலான போராட்டத்தில், மாவட்ட செயலர் நேரு, மாவட்ட தலைவர் சாரங்கன், விவசாயிகள், பெண்கள் என பலரும் பங்கேற்றனர். காவலான்கேட்டில் ஒன்று கூடிய 50 க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால், போலீசாரிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. கலெக்டரிடம் மனு அளிக்க போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சற்று நேரத்திற்கு பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சங்க நிர்வாகிகள் சண்முகம், சாரங்கன், நேரு உள்ளிட்டோர் சென்றனர். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் மனு அளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ