உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் கிராமத்தில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், நேற்று, விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சாரங்கன் தலைமை வகித்தார். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாய சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் நேரு உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்