உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்மாற்றி பழுதால் விளை நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி

மின்மாற்றி பழுதால் விளை நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி

உத்திரமேரூர்:கன்னிகுளத்தில் மின்மாற்றி பழுதால் விளை நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் ஊராட்சியில், மணல்மேடு, புலிவாய், கன்னிகுளம், விஜய நகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இங்குள்ள, விளை நிலங்களுக்கு மின்சாரம் வழங்க மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில், கன்னிகுளம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் வாயிலாக, 250 ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகிறது.இந்த மின்மாற்றியில், நேற்று முன்தினம் பழுது ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் மின் மோட்டரை இயக்கி விளை நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, கன்னிகுளத்தில் பழுதடைந்த மின்மாற்றியை உடனே சரி செய்ய, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை