உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அந்தரத்தில் தொங்கும் மின் விளக்கால் அச்சம்

அந்தரத்தில் தொங்கும் மின் விளக்கால் அச்சம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில், பழங்குடியினர் மக்களுக்கென அரசு சார்பில் வீடுகள் கட்டி குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இப்பகுதியில், 76 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்களின், குடியிருப்பு தெருவில் மின் கம்பங்கள் அமைத்து, வீடுகளுக்கு மின் இணைப்பு மற்றும் தெரு விளக்குகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இதில், ஒரு சில கம்பங்களில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளதோடு, மின் கம்பம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கு அறுந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.மின் கம்பி பிணைப்பில் தொங்கும் விளக்கு விழுந்தால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, இப்பகுதியில் அந்தரத்தில் தொங்கும் மின் விளக்கை ஒழுங்கு படுத்துவதோடு, எரியாத விளக்குகளை சீர் படுத்தி ஒளிர செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை