உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அய்யப்பனுக்கு மலர் பூஜை

 அய்யப்பனுக்கு மலர் பூஜை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உதயமாங்குளத்தில் அய்யப்பனுக்கு மலர் பூஜை விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஓரிக்கை உதயமாங்குளத்தில் அய்யப்பனுக்கு மலர் பூஜை விழா நடந்தது. இதில், நேற்று, மாலை 6:00 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அஷ்டோத்திர நாமாவளி நடைபெற்றது. அதை தொடர்ந்து காஞ்சி ஹரிஹரன் நியூ ஸ்டார் மெலோடிஸ் வழங்கும் அய்யப்ப பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 8:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு 18 குருசாமிகள் மூலம் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ