உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விருது பெற நால்வர் தேர்வு

விருது பெற நால்வர் தேர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 7,924 முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளியுடன் இணைந்து, பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என, தங்களை இணைத்துள்ளனர்.இதில், சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர், ஆசிரியர், பள்ளி மேலாண் குழுவினர், முன்னாள் மாணவர் ஆகிய நான்கு நபர்களை தேர்வு செய்து, மாநில ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குழுவினரால் விருது வழங்கப்பட உள்ளது.அதன்படி, நடப்பாண்டிற்கான விருது பெறுவதற்கு, சின்ன காஞ்சிபுரம்மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கோமதி, அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை துர்கா, குன்றத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண் குழுவைச் சேர்ந்த கஸ்துாரி, ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் கருணாநிதி ஆகியோர் விருதிற்கு தேர்வாகி உள்ளனர்.இந்த விருது பெற இருக்கும் நபர்களுக்கு, கல்வித் துறையினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி