உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துாய்மை பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்

துாய்மை பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்:நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் செந்தில் முன்னிலை வகித்தார். மாநகர சுகாதார அலுவலர் அருள்நம்பி வரவேற்றார்.முகாமில், மீனாட்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவனையின் அலோபதி மற்றும் சித்த மருத்துவம், மாநகராட்சி மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து மருத்துவ பரிசோதனை, நோயின் தன்மைக்கேற்ப மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.முகாமில், பொது மருத்துவம் சர்க்கரை, ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை