உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் நாளை இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரத்தில் நாளை இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 63வது இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரத்தில் நாளை நடக்கிறது.பெரிய காஞ்சிபுரம், சாலை தெரு, குஜராத்தி திருமண மண்டபத்தில் நாளை காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடக்கும், இம்முகாமில், பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்கின்றனர்.கண்புரை நோய் உள்ளவர்கள், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முற்றிலும் இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.இதில், போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின், மீண்டும் முகாம் நடைபெறும் இடத்திற்கு வரும் வரை, அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும்.முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 95438 81888 என்ற மொபைல் எண்களிலும், பெரிய காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டிக்கு சென்றும் முன்பதிவு செய்யலாம் என, கண் சிகிச்சை முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை