உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அமராவதிபட்டணத்தில் ரேசன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு

அமராவதிபட்டணத்தில் ரேசன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில், மல்லிகாபுரம், விழுதவாடி, படூர், அமராவதிபட்டணம், காட்டாங்குளம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அமராவதிபட்டணம் கிராமத்தில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, ரேசன் கடை கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்தது.மழை நேரங்களில் கட்டட கூரையில் இருந்து நீர் வழிந்து உணவு பொருட்கள் சேதமடைந்து வந்தன. இதை தவிர்க்க, ஒராண்டிற்கு முன் ரேசன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.இங்கு போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பழுதடைந்துள்ள ரேசன் கடை கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2025 -- 26ம் நிதி ஆண்டில், உத்திரமேரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 9.85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தற்போது, உத்திரமேரூர் தி.மு.க., -எம்.எல்.ஏ.,வாக சுந்தர் உள்ளார். இதையடுத்து, புதிய ரேசன் கடை கட்டடம் கட்டும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை