| ADDED : ஜன 26, 2024 11:53 PM
கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் அடுத்த கிளார் பகுதியில், பாலாற்றில் இருந்து பிரியும் வேகவதி ஆறு, முசரவாக்கம், மேல்ஒட்டிவாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் வழியாக சென்று, திம்மராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் இணைகிறது.வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைத்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதோடு, விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கீழ்கதிர்பூர் ஒட்டியுள்ள பெரும்பாக்கம் சாலையோரம் உள்ள வேகவதி ஆற்றங்கரை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால், வேகவதி ஆற்றின் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.எனவே, கீழ்கதிர்பூர் ஒட்டியுள்ள வேகவதி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பை குவியலை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.