மேலும் செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் வரும் 10ல் வைகுண்ட ஏகாதசி
02-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடக்கிறது. இதில், அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் காட்சியும், தொடர்ந்து கருடசேவை உற்வசம் விமரிசையாக நடக்கிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். உற்சவத்தையொட்டி வரும் 9ம் தேதி இரவு முழுதும், ஹரிபஜனை, திவ்யபிரபந்தம், கீர்த்தனைளுடன் பஜனை நடக்கிறது.
02-Jan-2025