உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உக்கம்பெரும்பாக்கத்தில் கோ பூஜை கோலாகலம்

உக்கம்பெரும்பாக்கத்தில் கோ பூஜை கோலாகலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம் பெரும்பாக்கத்தில், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், உலக நன்மை, சகல ஐஸ்வர்யமும், மஹாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டி, 108 கோ பூஜை விழா நடந்தது.விழாவையொட்டி காலை 6:30 மணிக்கு விநாயகர், வள்ளி, -தேவசேன சமேத சிவசுப்பிரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, கோபூஜை நடக்கும் இடத்தில், நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், சிவ சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், ருத்ராட்ச லிங்கபேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.இதில், திரளான பெண்கள், 108 கோபூஜையில் பசுவிற்கு பூஜை செய்தனர். தொடர்ந்து அரசு -வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்