உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  12 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிரசார பயணம்

 12 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிரசார பயணம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார பயணம் நேற்று காஞ்சிபுரத்தில் துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக கட்டடத்தில் நேற்று நடந்த பிரசார பயணத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் டில்லிபாபு உட்பட பலர் பங்கேற்றனர். 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி டிச.,4ல் மாவட்டதோறும் மாபெரும் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காவலன்கேட் பகுதியில் மறியில் நடக்க உள்ளது. இந்த மறியலுக்கு அனைத்து தரப்பு அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என, பிரசார பயணத்தை பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ