உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

வரும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம்:காந்தி ஜெயந்தியன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், வரும் 11ம் தேதி நடைபெற இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான, அக்., 2ல், நடத்தியிருக்க வேண்டிய கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கிராம சபை கூட்டம், அக்., 11ல், 274 ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டத்தில், ஜாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல், ஊராட்சி நிர்வாகத்தின் செலவினம், தணிக்கை அறிக்கை மற்றும் ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும், கொசுக்கள் வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு கணக்குகளை, ஊராட்சி அலு வலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை