உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல் குவாரி நிறுத்த வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

கல் குவாரி நிறுத்த வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்நது. குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், துாய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அவளூரில் இயங்கும் கல் குவாரி நிறுத்த வேண்டும் என, காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்பராஜபுரம் கிராமத்தில், சமுதாய கூடம்; ஆரிய பெரும்பாக்கம், முத்துவேடு, மேட்டுப்பாளையம் ஆகிய கிராமங்களில் சிமென்ட் சாலைகள்; திம்மசமுத்திரத்தில் காரிய மேடை, திருவள்ளுவர் நகரில் கிளை நுாலகம்; வாலாஜாபாத்: அவளூர் கல் குவாரி நிறுத்த வேண்டும், கம்பராஜபுரத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பழையசீவரத்தில் ரயில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்,அங்கம்பாக்கத்தில், பட்டாதாரர்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்படும். இளையனார்வேலுார், வள்ளிமேடு மயானத்திற்கு பாதை ஏற்படுத்த வேண்டும். உத்திரமேரூர்: மானாம்பதியில்,வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கூட்டு சாலையில் நீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். களியாம்பூண்டி கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தணும்.

ஏகனாபுரத்தில் ஏர்போர்ட் வேண்டாம்

ஏகனாபுரம் ஊராட்சியில், பரந்துார் விமான நிலையத்தால், பறிபோகும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மேலும், பரந்துார் விமான நிலையம் வேண்டாம் என, 15வது முறையாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதவிர, ஏகனாபுரம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை