உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குரூப்- - 1 எழுத்து தேர்வு 1,225 பேர் ஆப்சென்ட்

குரூப்- - 1 எழுத்து தேர்வு 1,225 பேர் ஆப்சென்ட்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், குரூப் - 1 மற்றும் குரூப் - 1ஏ தேர்வில், 1,225 பேர் தேர்வு எழுதவில்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17 மையங்களில், 25 தேர்வு அறைகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 மற்றும் குரூப் - 1ஏ தேர்வு நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 6,238 பேர் தேர்வு எழுத இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதில், 5,013 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்விற்கு, 1,225 பேர் தேர்வு எழுதவில்லை.இந்த தேர்வினை, 25 நபர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ