உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மது அருந்தும் இடமான உடற்பயிற்சி கூடம்

மது அருந்தும் இடமான உடற்பயிற்சி கூடம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், மேனல்லுார் கிராமத்தில் 2018ல் 30 லட்சம்ரூபாய் செலவில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது பூங்கா மற்றும்உடற்பயிற்சி கூடம் முறையான பராமரிப்பு இல்லாமல், திறந்த நிலையிலே உள்ளது. உடற்பயிற்சி கூடத்தில்அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள், தினமும் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். பின், பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டுசெல்கின்றனர். இதனால், பல்வேறு இடையூறு ஏற்படுகிறது.எனவே, பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மீண்டும் பயன்பாட்டில் கொண்டுவர, அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை