மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
14-Feb-2025
காஞ்சிபுரம்:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் கன்னியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பசுபதி, மாநில தகவல் தொழில்நுட்ப செயலர் பிரபு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.இதில், பொது சுகாதார துறையில் 100 சதவீதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அரசுக்கு அனுப்பியுள்ள 2,715 சுகாதார ஆய்வாளர்கள் நிலை இரண்டு சுகாதார கட்டமைப்பிற்கு தேவை என்ற கோப்பிற்கு உடனடியாக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் சவரிமுத்து நன்றி கூறினர்.
14-Feb-2025