மேலும் செய்திகள்
வீர ஆஞ்சநேயருக்கு 37வது ஆண்டு விழா
6 minutes ago
இன்று இனிதாக
6 minutes ago
கருத்தரங்கம்
7 minutes ago
காஞ்சிபுரம்: சிட்டியம்பாக்கம் குதிரைக்கால் மடுவு குறுக்கே, பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, வையாவூரில் இருந்து, சிட்டியம்பாக்கம் செல்லும் பிரதான சாலை வழியாக, வையாவூர், ஒழையூர், பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சென்னை மற்றும் வேலுார், பெங்களூரு ஆகிய பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை குறுக்கே, குதிரைக்கால் மடுவு தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் மீது, மழைக்காலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. வையாவூர் - சிட்டியம் பாக்கம் இடையே செல்லும் குதிரைக்கால் மடுவில், பாலமாக கட்டித்தர வேண்டும் என, பல்வேறு கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை ஏற்று, ஊரக வளர்ச்சி துறையினர், மாநில சிறப்பு உதவி நிதியின் கீழ், 7.76 கோடி ரூபாயில் புதிய பாலத்திற்கு துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாலப் பணிகள், ஓராண்டிற்கு பின் நிறைவு பெறும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர். அதுவரையில், வையாவூர் - சிட்டியம்பாக்கம் சாலையில், கனரக வாகனங்கள் செல்ல ஊரக வளர்ச்சி துறையினர் தடை விதித்து உள்ளனர். இதுகுறித்து, ஏனாத்துார் கூட்டு சாலை மற்றும் சிட்டியம்பாக்கம் சாலையில் இரு இடங்களில் எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர்.
6 minutes ago
6 minutes ago
7 minutes ago