மேலும் செய்திகள்
மகாகவி பாரதி விழா
24-Sep-2024
காஞ்சிபுரம் : எழுத்தாணி தமிழ்கலை இலக்கிய சங்கம் சார்பில், ஆன்மிக கவியரங்கம், கவிஞர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கும் விழா, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபம் அருகில் நடந்தது.வர்த்தக முதலீட்டாளர் இளம்பாரி சங்கர கார்த்திகேயன் தலைமை வகித்தார். குன்றை குப்புசாமி, செல்வ லிங்க குமார் முன்னிலை வகித்தனர்.இதில், தேசிய பத்தி ரிகையாளர் ஒருங் கிணைப்பு குழு தலைவர்கருணாகரன், ஆரணி, சேவூர் தமிழ்சங்க தலைவர் கவிஞர் மருத்துவர் கோபால், கவிஞர்கள் வசந்தா, செல்வம் ஆகியோருக்கு எழுத்தாணி விருது வழங்கப்பட்டது.கூரம் துரை, எழுத்தாணி அரிராசு ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு சிற்றிதழ்கள் மற்றும் எழுத்தாளர் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.
24-Sep-2024