உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உழவர் சந்தையில் சீசன் பழங்கள் வரத்து அதிகரிப்பு

உழவர் சந்தையில் சீசன் பழங்கள் வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு, கோடைக்காலத்திற்கு ஏற்ப, காய்கறி மற்றும் பழ வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.குறிப்பாக, பலா, வாழை, சப்போட்டா, தர்ப்பூசணி ஆகிய பழங்கள் வரத்து அதிகரித்துள்ளன. இதுதவிர, சிறு தானியங்கள், பாரம்பரிய அரிசி ரகங்கள், தரமான மரச்செக்கு எண்ணெய் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.இதை பொது மக்கள் வாங்கி உபயோகப்படுத்த வேண்டும் என, காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குனர் ஜீவராணி தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ