காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் எண்ணிக்கை அதிகரிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கர்ப்பிணியர் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.தினமும் 20 -- 35 பிரசவம் பார்க்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளில், 22,049 பிரசவம் நடந்துள்ளது. இதில், 12,969 சுகப்பிரசவமும், 9,080 சிசேரியன் பிரசவமும் நடந்துள்ளது.ஆண்டுதோறும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகப்பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணியர் அனைவருக்கும் சுகப்பிரசவம் நடக்க முயற்சி செய்கிறோம்.தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே, கர்ப்பிணியரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சிசேரியன் செய்ய வேண்டிய நிலை உள்ளது.சுகப்பிரவசம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனையில் 'அட்மிட்' செய்யப்படும் கர்ப்பிணியருக்கு எளிமையான யோகா பயிற்சி அளிப்பதோடு, நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்துகிறோம்.கடந்த ஜன., முதல் மே மாதம் வரை என, ஐந்து மாதங்களில் மொத்தம், 1,908 பேருக்கு பிரசவம் நடந்துள்ளது. இதில், 1,146 சுகப்பிரசவமும், 762 சிசேரியன் பிரசவமும் நடந்துள்ளது.மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஆண்டுதோறும் சுக பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிசேரியன் பிரசவம் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நான்கு ஆண்டு பிரசவ விபரம்
ஆண்டு மொத்தம் சுக பிரசவம் சிசேரியன்2021 5,481 3,087 2,3942022 5,536 3,301 2,2352023 5,643 3,261 2,3822024 5,389 3,320 2,069மொத்தம் 22,049 12,969 9,080
கடந்த ஐந்து மாத பிரசவம் விபரம்
ஜனவரி 366 194 172பிப்., 293 174 119மார்ச் 395 238 157ஏப்ரல் 403 246 157மே 451 294 157மொத்தம் 1,908 1,146 762