உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அனுமதியற்ற மரம் அறுக்கும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு

அனுமதியற்ற மரம் அறுக்கும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு

காஞ்சிபுரம்:மரம் அறுக்கும் தொழிற்சாலைகள், 'சா மில்' என்ற பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், வனத்துறையிடம் முறையாக பதிவு செய்யாமல் பல, மரம் அறுக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது. பட்டா நிலத்தில், போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மரம் அறுக்கும் இயந்திர தொழிற்சாலைகள் இயங்குகிறதா என, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.ஆனால், அதுகுறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலத்திலேயே பல தொழிற்சாலைகள் இயங்கும் நிலையில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.காஞ்சிபுரம் கலெக்டர்அலுவலகம் சுற்றிலும்உள்ள சில மரம் அறுக்கும் தொழிற்சாலைகள் முறையான அனுமதியின்றி இயங்குவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறுகையில், ''அரசு புறம்போக்கு நிலங்களில் மரம் அறுக்கும் ஆலைகளுக்கு எந்தவித அனுமதியும் இல்லை. அவ்வாறு விதிமீறி இயங்கும் ஆலை குறித்து தகவல் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக 'சீல்' வைத்து மூடப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி