உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையம் எடமச்சியில் அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையம் எடமச்சியில் அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இந்நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள், 2,000 ஏக்கர் பரப்பளவில், நவரை பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இதற்கான அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய, இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நீண்ட தூரம் உள்ள உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர்.மேலும், விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பண விரயமும் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க, விவசாயிகள் துறை அதிகாரிகளிடம், நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எடமச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ