சகதியான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, அனந்தஜோதி தெரு வழியாக பிள்ளையார்பாளையம், பல்லவர்மேடு, கலெக்ட்ரேட், மடம் தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள இந்த சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், சாதாரண மழைக்கே சகதி சாலையாக மாறி விடுகிறது. இதனால், சகதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, சகதியாக மாறியுள்ள அனந்தஜோதி தெருவை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.