உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விவசாய நிலத்திற்கு பாதை பேருந்து நிலையத்தில் ஆய்வு

விவசாய நிலத்திற்கு பாதை பேருந்து நிலையத்தில் ஆய்வு

முடிச்சூர்:தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில், வெளிவட்ட அணுகு சாலையை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ., இடத்தில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்திற்கு பின்புறம், 150 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.விவசாய நிலத்திற்கு செல்ல போதிய பாதை இல்லை. அதனால், 'ஆம்னி பேருந்து நிலையம் வழியாக பாதை அமைத்து தர வேண்டும். ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தில் கட்டப்படும் கால்வாய் நீரை விவசாய நிலத்தில் விட்டால், விவசாயம் பாதிக்கும்' என்று, முடிச்சூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், தாம்பரம் எம்.எல்.ஏ.,வை சந்தித்து மனு கொடுத்தனர்.இதையடுத்து, ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் இடத்தில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, விவசாய நிலத்திற்கு செல்ல அணுகு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை