உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருப்பருத்திக்குன்றம் சமணர் கோவிலில் ரூ.30 லட்சத்தில் திருப்பணி செய்ய முடிவு

திருப்பருத்திக்குன்றம் சமணர் கோவிலில் ரூ.30 லட்சத்தில் திருப்பணி செய்ய முடிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சமணர் கோவிலில், இடிதாங்கி பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் நகரம், சிவ, விஷ்ணு, சமண வழிபாடுகளை கொண்டிருந்தது.சிவ, விஷ்ணு கோவில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமுள்ள நிலையில், சமண மத கோவில்கள் குறைந்த அளவிலேயே உள்ளன. 'ஜீன காஞ்சி' என்றழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், முறையான பராமரிப்பின்றி, கோபுரங்களில் செடி, மரம் போன்றவை வளர்ந்துள்ளன. கோவிலில் இடிதாங்கி இல்லாததால், மழைக்காலங்களில் கோபுரங்கள் சேதமாக வாய்ப்புள்ளது.இக்கோவில் பாதுகாப்பு குறித்து, மாநில தொல்லியல் துறை அக்கறை செலுத்தவில்லை என, புகார் எழுந்தது. இந்நிலையில், கோவிலை சீரமைத்து திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கோவில் நிர்வாகி கூறியதாவது:கோவிலை முழுமையாக சீரமைக்க, ஹிந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. சீரமைப்பு பணிக்காக, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இடிதாங்கி அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கோவில் கோபுரம் ஒன்றும் சேதமாகியுள்ளது. அதேபோல், சமீபத்தில் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது; கூடுதலாக நிதி கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை