உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நான் முதல்வன் திட்டத்தில் 522 பேருக்கு பணி வாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தில் 522 பேருக்கு பணி வாய்ப்பு

காஞ்சிபுரம்:தமிழ்நாடு திறன் வளர்ச்சி நிறுவனம் சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.முகாமில், 32 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று நேர்முகத் தேர்வு நடத்தியது. இதில் 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து மூன்றாமாண்டு மாணவ - மாணவியர், 2,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.முதற்கட்டமாக, 522 மாணவ - மாணவியருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.முகாமில், 'நான் முதல்வன்' மாவட்ட வேலைவாய்ப்பு பொறுப்பு அலுவலர் எம்.தாரீஷ், கல்லுாரி முதல்வர் முனைவர் பி.முருககூத்தன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் வி. ராஜா, பி.பிரபு உள்ளிட்டோர் நேர்முகத்தேர்வில் பங்கேற்பதற்கான ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை