உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 7ல் வேலை வாய்ப்பு முகாம்

வரும் 7ல் வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 7ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. தமிழகம் முழுதும் 108 ஆம்புலனஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதில், ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முக தேர்வு அன்று, 24 வயதிற்கு மேலும், 35 வயதிற்கு மிகாமலும், 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தது மூன்று ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தது ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., பிளஸ் 2 வகுப்பிற்கு பின், இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். லைப் சயின்ஸ் பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், பயோ-கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.21,320 வழங்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் தகுதியுடைய விண்ணப்பதாரர் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பாக அனைத்து அசல் சான்றிதழ்களையும் வரும் 7ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும்போது சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 044 2888 8060, 75, 77 என்ற தொலைபேசி எண்ணில், காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி