உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.வெளியூர்களில் இருந்து, காஞ்சிபுரம் வருவோரும், உள்ளூரில் இருந்து வெளியூர் செல்வோரும் கூட்ட நெரிசலில் சிக்காமல் பேருந்தில் பயணிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம் மற்றும் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில், ஒலிமுகமதுபேட்டை மற்றும் புதிய ரயில் நிலையம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இதில், வேலுார், ஆற்காடு, காவேரிபாக்கம், ஓச்சேரி, பாலுச்செட்டிசத்திரம், தாமல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஒலிமுகமதுபேட்டையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.சென்னை, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், புதிய ரயில் நிலையம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை