மேலும் செய்திகள்
புதிதாக அமைக்கப்பட்ட சாலை 2 மாதங்களிலேயே சேதம்
10-Jul-2025
உத்திரமேரூர்:காக்கநல்லுார் சாலை 95 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உத்திரமேரூரில் இருந்து, காக்கநல்லுார் செல்லும் 2 கி.மீ., சாலையை பயன்படுத்தி, சுற்று வட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை சேதமடைந்து இருந்தது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 -- 26ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், 95 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டது. தொடர்ந்து, தார்ச்சாலை புதுப்பிக்கும் பணிகள், ஒரு வாரமாக நடந்து வந்தது. தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு தார்ச்சாலை பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
10-Jul-2025