காஞ்சிபுரம் : 'சுகாதார குறியீடுகளில், காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மையாக உள்ளது' என, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.புற்றுநோய் சிகிச்சைக்குரிய உபகரணங்கள், இறகு பந்து மைதானம் திறப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களின் கூடுதல் கட்டடங்கள் திறப்பு விழா நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் - தி.மு.க.,எம்.பி.,செல்வம் மறறும் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், எழிலரசன் ஆகியார் முன்னிலை வகித்தனர்.அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் சரவணன் வரவேற்றார். காஞ்சிபுரம் துணை சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் நன்றி கூறினார்.மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் துவக்கி வைத்து சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன் பேசியதாவது:சுகாதார குறியீடுகளுடன் நிகழ்ச்சி நிரல் அச்சிட்டிருப்பது வரவேற்றத்தக்தது. பிறப்பு 13.6 சதவீதம். இறப்பு, 5.6 சதவீதம். மகப்பேறு மரணங்கள், 36.1 சதவீதம். குழந்தை இறப்பு, 6.2 சதவீதம் உள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட முதலிடம் வகித்து வருகிறது.ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பணிகள் நிறைவுற்ற பின், முதல்வர் திறக்க உள்ளார். இங்கு, 20 கோடி ரூபாய் செலவில், போலியே கேர் சென்டர் மற்றும், 20 கோடி ரூபாய் செலவில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தபட உள்ளது.தொற்றுநோய்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், தொற்றா நோய் தாக்கம் மாநில அளவில் அதிக அளவு உள்ளது. குறிப்பாக, புற்றுநோய் தடுக்க அரசு முறச்சி எடுத்து வருகிறது.ஈரோடு, திருப்பத்துார், கன்னியாகுமாரி, ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் கட்டணறியப்பட்டுள்ளது. இங்கு, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் சாயக்கழிவுகளால் ஏற்படுகிறது.இங்குள்ள மக்களை பரிசோதனை செய்யும் பணிகளும் துவக்கப்பட்டு உள்ளன. துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு, சிகிச்சை பெற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.