| ADDED : ஜன 11, 2024 01:03 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், நேர்த்திக் கடனாக உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுகிறது.அதன்படி, கோவிலில் உள்ள, 10 பொது உண்டியல், 1 கோசாலை உண்டியல், 1 திருப்பணி உண்டியல் என, மொத்தம் 12 உண்டியல், கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில், 10 பொது உண்டியலில், 23 லட்சத்து 85,670 ரூபாயும், கோசாலை உண்டியலில் 1 லட்சத்து 15,571 ரூபாயும், திருப்பணி உண்டியலில் 92,784 ரூபாய் என, மொத்தம், 25 லட்சத்து 94,034 ரூபாய் கோவிலுக்கு வருவாயாக கிடைத்தது.