உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பின்றி இருக்கும் காஞ்சி தாலுகா வளாகம்

பராமரிப்பின்றி இருக்கும் காஞ்சி தாலுகா வளாகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் மிக பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம், கடந்த 2020ல் பயன்பாட்டுக்கு வந்தது.இந்த புதிய கட்டடத்தில், பொதுமக்களுக்கு கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் சிறிய அளவிலான பூங்கா போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால், தாலுகா வளாகமே பராமரிப்பு இல்லாமல் மாறியது. எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. சிறிய அளவிலான பூங்கா பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது.ஏற்கனவே பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறை பராமரிப்பு இல்லை என புகார் எழுந்தது. இப்போது, வளாகம் முழுதுமே பராமரிப்பு இன்றி மோசமாக காட்சியளிக்கிறது.எனவே, காஞ்சிபுரம் தாலுகா வளாகத்தை சுத்தமாக வைக்க, தாசில்தார் நடவடிக்கை எடுக்க, நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை