| ADDED : ஆக 01, 2024 01:12 AM
வாலாஜாபாத் பாலாற்றில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?
வாலாஜாபாத், ராஜவீதி, பஜார் சாலையில் பாலாற்றங்கரையையொட்டி பல்வேறு கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதில், ஒரு சில வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, முறையாக கழிவுநீர் தொட்டி மூலம் பராமரிக்காமல், பின்புறம் உள்ள பாலாற்று படுகையில் விடுகின்றனர்.இதனால், பாலாற்றில் மண்வளம் பாதிப்பதோடு, பாலாற்று படுகையில் கழிவுநீர் தேங்கி சாக்கடையாகிறது. மேலும், மழைக்காலங்களின் போது பாலாற்று நீரோடு சாக்கடை தண்ணீர் கலந்து நீர் மாசு ஏற்படுகிறது. எனவே, பாலாற்றங்கரையையொட்டி உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, பாலாற்றில் விடாதவாறு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர். விமல், வாலாஜாபாத்.