உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு, தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.காஞ்சிபுரம் ஆலடி நகராட்சி நடுநிலைப்பள்ளி, முத்துசெட்டியார் நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஒக்கபிறந்தான் குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், களப்பணியாக நேற்று, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.அங்கு, கோட்ட தீயணைப்பு அலுவலர் பார்த்திபன் உத்தரவின்படி, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் தீயணைப்பு வீரர்கள், மாணவ மாணவியருக்கு, தீ தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.விபத்தில் சிக்கியோரை காப்பாற்றுவது, தீக்காயம், விஷம் சாப்பிட்டோர், பாம்புக் கடி, மின்சார தாக்குதல், விஷப்புகை, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்தும் விளக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியைகள் வெரோனிகாமேரி, ஜீவா, சாகிதாபேகம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ