குன்றத்துார் கோவிலில் 22ம் தேதி கந்தசஷ்டி விழா
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 22ம் தேதி முதல் கந்த சஷ்டி திருவிழா துவங்குகிறது. குன்றத்துார் மலை மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் என்ற சிறப்பை, இக்கோவில் பெற்றுள்ளது. இங்கு, வரும் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை, கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 26ம் தேதி கந்தழீஸ்வரர் கோவிலில் வேல் வாங்கும் விழாவும், 27ம் தேதி சூரசம்ஹாரமும், 28ம் தேதி திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில், அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதாகார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.