உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்வேலியை மிதித்த இரண்டு வாலிபர்கள் பலி

மின்வேலியை மிதித்த இரண்டு வாலிபர்கள் பலி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே, வயலை சுற்றி போடப்பட்டிருந்த, மின்வேலியை மிதித்த, இரண்டு வாலிபர்கள், மின்சாரம் தாக்கி இறந்தனர். காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணு, 55. இவர், தனது நிலத்தில், நிலக்கடலை பயிரிட்டுள்ளார். பன்றி வந்து பயிர்களை சேதப்படுத்தாமலிருக்க, வயலை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். நேற்றுமுன்தினம் காலை, விஷார் கிராமம், இந்திரா நகரை சேர்ந்த முனுசாமி, 45, என்பவருக்கு சொந்தமான, நான்கு எருமை மாடுகள், மேயச் சென்றன. அவை, இரவாகியும் வீடு திரும்பாததால், இரவு 9.30 மணிக்கு, முனுசாமி, அருகில் வசிக்கும் தனசேகரன், 22, அருண், 22, ஆகியோரை அழைத்துக் கொண்டு, மாடுகளை தேடிச் சென்றார். மூன்று பேரும் மண்ணுவின் வயலுக்கு சென்ற போது, காலில் கம்பி தடுக்கியதால், அருண் தடுமாறி மின் வேலி மீது விழுந்தார். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை தூக்க முயன்ற தனசேகரன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். பாலுசெட்டிசத்திரம் போலீசார், நிலத்தின் உரிமையாளரான மண்ணு, அவரது மருமகன் சங்கர், 30, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை